சீனாவுக்கு எதிராக ஆளில்லா போர்விமானங்களை களமிறக்க விரையும் ஜப்பான் !!

சீனா தற்போது இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் தொந்தரவாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஜப்பான் சீனாவுக்கு எதிராக ஆளில்லா போர் விமானங்களை 2035 ஆண்டு வாக்கில் களமிறக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீனா தற்போது 1000க்கும் அதிகமான 4ஆம் தலைமுறை போர் விமானங்கள் மற்றும் புதிய 5ஆம் தலைமுறை போர் விமானங்களை கொண்டுள்ளது.

இதனை சமாளிக்கும் வகையில் ட்ரோன்கள், போர் விமானங்கள் கட்டுபடுத்தும் வகையிலான ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா போர் விமானங்களை உருவாக்க ஜப்பான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்தில் மிட்ஸூபிஷி, சுபாரு உள்ளிட்ட தலைசிறந்த ஜப்பானிய நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளது கூடுதல் சிறப்பு ஆகும்.