
சமீபத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் அவிவ் கோச்சாவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஏற்கனவே சில திட்டங்கள் கைவசம் உள்ளதாகவும்,
அவற்றுடன் புதிய சில தாக்குதல் திட்டங்களை வகுக்க படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசுகையில் எது எப்படியோ இதற்கான முடிவெடுக்கும் அதிகாரம் அரசியல் தலைமை இடம்தான் உள்ளது ஆனால் தயாராக இருப்பது எங்களது கடமை என்றார்.
மேலும் ட்ரம்ப் நிர்வாகம் விலக்கி கொண்ட அமெரிக்க ஈரான் ஒப்பந்தம் உயிர்ப்பிக்கபட்டால் அது ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பெரும் உதவியாக அமைந்துவிடும் எனவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஈரானின் தலைமை விஞ்ஞானி மொஹ்ஸீன் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டதில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.