டெல்லி குண்டுவெடிப்பில் ஈரானுக்கு தொடர்பு ?? மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு !!

  • Tamil Defense
  • January 30, 2021
  • Comments Off on டெல்லி குண்டுவெடிப்பில் ஈரானுக்கு தொடர்பு ?? மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு !!

தில்லியில் இஸ்ரேலிய தூதரகம் முன்னர் நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இஸ்ரேலிய தூதரகம் அருகே கிடைத்த கடிதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கடிதத்தில் “இது ட்ரெய்லர் தான் எனவும், ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய தளபதி ஜெனணல் காஸெம் சொலைமானி மற்றும் ஈரானிய தலைமை அணு விஞ்ஞானி மோஹ்ஸீன் ஃபக்ரிஸாதே ஆகியோரின் மரணங்கள் குறித்தும் எழுதப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இவர்களின் மரணங்களுக்காக ஈரான் இஸ்ரேலை விமர்சித்து வந்த நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து உலகம் முழுவதும் இஸ்ரேலிய தூதரங்களில் பாதுகாப்பு அதிகபடுத்துப்பட்டு உள்ளது.