
இந்திய கடற்படை தற்போது அரிஹந்த் வகையின் முதல் பலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். அரிஹந்தை இயக்கி வருகிறது.
விரைவில் அரிஹந்த் ரகத்தின் இரண்டாவதும் கடைசி கப்பலுமான ஐ.என்.எஸ் அரிகாட் படையில் இணைய உள்ளது.
இந்த இரு நீர்மூழ்கி கப்பல்களும் அணுசக்தியால் இயங்குவதோடு மட்டுமின்றி, 750கிமீ தொலைவு வரை அணு ஆயுதம் சுமந்து சென்று தாக்கும் கே15 ரக ஏவுகணையில் நான்கை சுமந்து செல்லும் திறன் கொண்டவை ஆகும்.
இந்த கப்பல் படையில் இணையும் பட்சத்தில் உலகில் இந்திய கடற்படையின் வலிமை கணிசமாக அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் பெரும் ராணுவ சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தை இந்தியா பெறும் என்பதில் ஐயமில்லை.