சீன சர்வே கப்பலை தனது எல்லையை விட்டு வெளியேற்றிய இந்தோனேசிய கடலோர காவல் படை

  • Tamil Defense
  • January 17, 2021
  • Comments Off on சீன சர்வே கப்பலை தனது எல்லையை விட்டு வெளியேற்றிய இந்தோனேசிய கடலோர காவல் படை

சீன சர்வே கப்பலான ஜியாங் யோங் ஹோங் 3 இந்தோனேசிய கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளது.

அதன் ட்ராக்கர் கருவியும் அடிக்கடி அணைவதும் திரும்ப செயல்படுவதும் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில்,இந்தோனேசிய கடலோர காவல்படை விரைந்து சென்று இந்தோனேசிய கடல் எல்லையில் இருந்த சீன கப்பலை வெளியேற்றியது.

இந்தோனேசியாவுக்கு சொந்தமான பகுதிகளை சீனா உரிமை கோருவதும், மீன்படி படகுகளை தனது கடலோர காவல்படை துணையுடன் அத்துமீற வைப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.