விரைவில் இந்தியா- இந்தோனேசியா விமானப்படைகள் கூட்டு பயிற்சி !!

சமீபத்தில் இந்தியாவில் தனது பணி காலத்தை நிறைவு செய்து தாய்நாடு திரும்ப உள்ள இந்தோனேசிய தூதர் சிதார்டோ ரேஸா சூர்யாதிபூரோ அளித்த பேட்டியில்,

இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே ஏற்கெனவே தரைப்படை மற்றும் கடற்படை கூட்டு பயிற்சிகள் நடைபெற்று வருவதாகவும்,

விரைவில் இரு நாடுகளின் விமானப்படைகள் இடையேயான கூட்டு பயிற்சி தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த பயிற்சிகள் சீனாவுக்கு எச்சரிக்கை செய்தியாக பார்க்கப்படுகிறது.