இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய துப்பாக்கி

  • Tamil Defense
  • January 14, 2021
  • Comments Off on இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய துப்பாக்கி

வருகிறது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய துப்பாக்கி அரத பழைய ஸ்டெர்லிங் துப்பாக்கிகளுக்கு மாற்று !!

இந்திய தரைப்படையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ஏ.எஸ்.எம்.ஐ எனப்படும் துப்பாக்கி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

ஏற்கனவே சோதனைகளில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ள இது விரைவில் கடைசி கட்ட சோதனைக்கு பின்னர் படையில் இணைக்கப்பட உள்ளது.

மிக நீண்ட காலமாக நமது முப்படைகள், துணை ராணுவ படைகள் மற்றும் மாநில காவல்துறைகள் பயன்படுத்தி வரும் அரத பழைய ஸ்டெர்லிங் SMG ரக துப்பாக்கிகளுக்கு இது மாற்றாக அமையும், இது சுமார் 100மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்க வல்லது.

இந்த துப்பாக்கி முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் இயந்திர பிஸ்டல் என்பது குறிப்பிடத்தக்கது.