
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இலகுரக ட்ரோன்களை உருவாக்கும் பணியை துவங்கி உள்ளது.
இவை கிரெனேட் லாஞ்சர்களில் இருந்து ஏவும் வகையிலும், சுமார் 40 நிமிடங்கள் பறக்கும் வகையிலும் வடிவமைக்கப்படும்.
இவை எந்த நேரத்திலும் எந்த கால சூழலிலும் இயங்கும் திறன் கொண்டவை ஆகும், இந்த திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் இவற்றை ஆயுதமாக பயன்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படும்.