சிங்கப்பூர் கடற்படையின் நீர்மூழ்கிகள் விபத்தில் சிக்கினால் இனி இந்தியா உதவும் !!

  • Tamil Defense
  • January 22, 2021
  • Comments Off on சிங்கப்பூர் கடற்படையின் நீர்மூழ்கிகள் விபத்தில் சிக்கினால் இனி இந்தியா உதவும் !!

நேற்று முன்தினம் இந்தியா மற்றும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்கள் இடையே வீடியோ கான்ஃபரன்சிங் வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது சிங்கப்பூர் கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்கள் மூழ்கினால் இந்தியா உதவும் வகையில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆகியது.

உலகில் ஏறத்தாழ 40 நாடுகள் தங்களது கடற்படைகளில் நீர்மூழ்கி கப்பல்களை இயக்கி வருகின்றன, ஆனால் அதில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நாடுகளே ஆழ்கடல் மீட்பு வாகனங்களை வைத்துள்ளன.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவும் இத்தகைய வசதி இல்லாமல் தான் இருந்தது, மீட்பு பணிகளுக்கு அமெரிக்காவுடன் அப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்தியா தற்போது மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட ஆழ்கடல் மீட்பு வாகனங்களை இயக்கி வருகிறது.

இந்த நிலையில் இத்தகைய வசதிகளற்ற சிங்கப்பூர் தனது நீர்மூழ்கிகள் ஏதேனும் விபத்தில் சிக்கினால் உடனடியாக மீட்பு பணிகளுக்கு இந்தியா உதவும் வகையிலான ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன் படி இனி இந்தியா 650மீட்டர் ஆழம் வயை செல்லக்கூடிய தனது ஆழ்கடல் மீட்பு வாகனங்களை கொண்டு சிங்கப்பூர் கடற்படைக்கு உதவ முடியும்.

மேலும் தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் தனது உதவி கரத்தை இந்தியா நீட்ட இது வழிவகை செய்கிறது.