இந்தியா வரலாற்றின் பிரமாண்ட கடலோர பாதுகாப்பு ஒத்திகை !!

  • Tamil Defense
  • January 13, 2021
  • Comments Off on இந்தியா வரலாற்றின் பிரமாண்ட கடலோர பாதுகாப்பு ஒத்திகை !!

நேற்றைய தினம் இந்திய கடற்படை நம் நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய கடலோர பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியை தொடங்கி உள்ளது.

சுமார் 7500 கிலோமீட்டர் நீளம் கொண்ட நம் நாட்டின் ஒட்டுமொத்த கடற்கரை பகுதிகளையும் இது உள் அடக்கிய பயிற்சி ஆகும்.

இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, சுங்க இலாகா மற்றும் மாநில கடலோர காவல்துறைகள் இதில் பங்கு பெற உள்ளன.

மேலும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மீன்வளத்துறை, சுங்க இலாகா மற்றும் மாநில அரசுகள் இதில் சம பங்கு வகிக்க உள்ளன.

இந்த ஒத்திகையின் பெயர் |சீ விஜில்” ஆகும் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.