
இந்தியா தற்போது தயாரித்துள்ள இரு வகையான கொரோனா தடுப்பு மருந்துகளும் பல நாடுகளில் வரவேற்பை பெற்றுள்ளன.
ஏற்கனவே பூட்டான், வங்கதேசம், மாலத்தீவுகள், பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்திய தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் இந்திய கடற்படையின் P8I விமானம் மூலமாக மும்பையில் இருந்து செஷல்ஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று கொரோனா தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.