ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரத்கர் என்ற இடத்தில் இந்திய விமானப்படை போர்விமானம் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் சிக்கிய விமானம் மிக் 21 பைசன் ரகம் எனவும், விமானி உயிர் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானம் வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளதாக இந்திய விமானப்படை அறிக்கை வெளியிட்டு உள்ளது.