இன்று இந்திய-சீன கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை

இரண்டரை மாதத்திற்கு பிறகு தற்போது மீண்டும் இந்திய சீன கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.மே 2020 முதல் இரு நாடுகளும் எல்லைப் பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

XIV கார்ப்ஸ் கமாண்டர் லெப் ஜென் PGK மேனன் மற்றும் தெற்கு ஜின்ஜியாங் இராணுவ பகுதி கமாண்டர் மேஜர் ஜென் லியு லின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.சீனப் பகுதியில் உள்ள மோல்டோ எனும் பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும்.

பெரிய அளவிலான பேச்சுவார்த்தைகள் இல்லை.இரு புறமும் 50000 வீரர்களை அளவில்லா காலத்திற்கு குவித்து வைத்துள்ளன.தற்போது நடக்கும் இந்த பேச்சுவார்த்தைகள் எல்லையில் பெரிய அளவிலான சண்டை ஏதும் நடைபெறாமல் தடுக்கவே ஆகும்.