
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூரில் செனாப் நதி அருகே இளம்பெண் ஒருவர் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது ஆற்றில் தவறி விழுந்த அவர் நீரோட்டத்தில் இழுத்து செல்லப்பட்டார். உடனடியாக பொதுமக்கள் ராணுவம் மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இந்த நிலையில சம்பவ இடத்துக்கு வந்த ராணுவ வீரர்கள் கனிராஜ் மற்றும் சுனில் ஆகியோர் ஆற்றில் குதித்தனர்.
இருவரும் உயிரை பணயம் வைத்து இளம்பெண்ணை காப்பாற்றினர், அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.