பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம்

  • Tamil Defense
  • January 2, 2021
  • Comments Off on பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம்

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

நேற்று ரஜோரி மாவட்டத்தில் நௌஸ்ஷெரா செக்டாரில் பாகிஸ்தான் இராணுவம் சிறிய மோட்டார்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மூலம் அத்துமீறி இந்திய நிலைகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் நாய்ப் சுபேதார் ரவீந்தர் அவர்கள் படுகாயமடைந்தார். படுகாயம் அடைந்த வீரர் ரவீந்தரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வீரமரணம் அடைந்தார்.

அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இச்சம்பவம் நேற்று புத்தாண்டு தினத்தன்று நடைபெற்றது.

2020ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு ஒப்பந்தத்தை மீறி கிட்டத்தட்ட 4000 முறை இந்தியாவை தாக்கியுள்ளது. இந்தியாவும் இதற்கு கடுமையான பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.