
இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 10,000 துருப்புகளை சீனாவுடனான எல்லைக்கு அனுப்பி வைக்க தரைப்படை திட்டமிட்டு உள்ளது.
இவர்கள் ரிசர்வில் இருக்கும் அதிவிரைவு டிவிஷனை சேர்ந்த துருப்புகள் ஆவர், தேவை ஏற்படும் போது உடனடியாக களமுனைக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.
தரைப்படையின் கிழக்கு கட்டளையகம் தற்போது சீன எல்லையில் தனது நடவடிக்கைகளை அதிகரித்து கொள்ள தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.