பிறந்த குழந்தையுடன் தவித்த தாய்-உதவிக்கரம் நீட்டிய இராணுவ வீரர்கள்

  • Tamil Defense
  • January 24, 2021
  • Comments Off on பிறந்த குழந்தையுடன் தவித்த தாய்-உதவிக்கரம் நீட்டிய இராணுவ வீரர்கள்

பிறந்த குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்த பெண்மனிக்கு இராணுவ வீரர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்ட மருத்துவமனையில் சிக்கித்தவித்த பெண்மனிக்கு இராணுவ வீரர்கள் உதவியுள்ளனர்.

அளவுக்கதிகமான பனி பொழிந்தமையால் அவர்களால் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.சுமார் ஆறு கிமீ தூரம் முழங்கால் அளவு பனியில் நடந்தே அவர்களை தூக்கி சென்று வீடு சேர்த்துள்ளனர் வீரர்கள்.

இராணுவத்தின் 28வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் வீரர்கள் இந்த உதவியை செய்துள்ளனர்.இதற்காக அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் அந்த பெண்மனியின் கனவர்.