
ஜம்மு காஷ்மீர் மாநிலம் துனிவார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் பிரசவத்திற்காக பஸல்போரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவருக்கு பிரசவம் முடிந்து குழந்தை பிறந்த நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக வீட்டுக்கு செல்ல முடியாமல் இருந்தார்.
இதையடுத்து ராணுவத்தினர் பஸல்போராவில் இருந்து துனிவார் வரை சுமார் 3.5 கிமீ அந்த பெண்ணையும் அவரது குழந்தையையும் சுமந்து சென்று பத்திரமாக வீடு சேர்த்தனர்.