
இந்தியாவின் மேற்கு எல்லையை பெரும்பாலும் திபெத் பகிர்ந்து கொள்ள வேண்டியது ஆனால் சீனா ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது சீனா இந்தியாவுடன் உரசி கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணேயின் உத்தரவுபடி திபெத் பற்றிய கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க தரைப்படையின் பயிற்சி கட்டளையகம் முடிவு செய்துள்ளது.
இதுபற்றி பேசிய அதிகாரிகள் கூறுகையில் சீன மொழியை கற்பதாலேயே ஒருவர் சீனாவை முழுவதும் புரிந்து கொள்ள முடியாது, தற்போது சீனாவை நன்கு புரிந்து கொண்ட அதிகாரிகள் மிகவும் குறைவே,
ஒப்பீட்டளவில் பாகிஸ்தானை நன்கு புரிந்து கொண்ட அதிகாரிகளை விட சீன நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகள் குறைவு என்றனர்.
எனவே திபெத்திய கலாச்சாரம், பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை பற்றிய கல்வியை பெற அதிகாரிகள் ஊக்குவிக்கப்பட உள்ளனர்.
பெங்களூர், பாட்னா, தில்லி, மேற்கு வங்கம், கேங்டாக் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மையங்களில் அதிகாரிகள் கல்வி விடுப்பில் போய் படிக்கலாம் மேலும் சீன எல்லையோரம் அதிக காலம் பணியமர்த்தப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த முடிவு திபெத்தை மையமாக கொண்டு ராணுவம் சீனாவுக்கு எதிராக எடுக்கும் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.