ஒரே நாளில் காஷ்மீரில் நோயாளி மற்றும் கர்ப்பிணி பெண்களை பனிப்பொழிவில் இருந்து மீட்ட ராணுவ வீரர்கள் !!

  • Tamil Defense
  • January 7, 2021
  • Comments Off on ஒரே நாளில் காஷ்மீரில் நோயாளி மற்றும் கர்ப்பிணி பெண்களை பனிப்பொழிவில் இருந்து மீட்ட ராணுவ வீரர்கள் !!

திரு. மொஹமது தார் என்பவர் தனது மனைவி கடுமையான ஆஸ்துமா நோயாளி அவரை மருத்துவமனை கொண்டு செல்ல உதவுமாறும் ராணுவத்தை கேட்டு கொண்டார் அதன்படி ராணுவத்தினர் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தவிர மூன்று கர்ப்பிணி பெண்களை ராணுவ வீரர்கள் மீட்டு மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் பத்திரமாக ராணுவத்தினர் சேர்த்தனர்.

திரு. குலாம் மீர் என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பனிப்பொழிவில் சிக்கிய தனது மகளை மீட்குமாறு கோரிக்கை வைத்தார் இதனையடுத்து ராணுவத்தினர் விரைந்து சென்று சுமார் 3கிமீ தூரம் கடும் பனிப்பொழிவிலுப் சுமந்து சென்று மருத்துவமனையில் அப்பெண்ணை அனுமதித்தனர்.

திரு. மன்சூர் அஹமது என்பவர் பிரசவ வேதனையால் கஷ்டப்படும் தனது மனைவியை தகுந்த நேரத்தில் மருத்துவமனை கொண்டு சேர்க்க உதவுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று வீரர்கள் சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அப்பெண்ணை கொண்டு சென்று அனுமதித்து உள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வழியில் பனிப்பொழிவால் சிக்கிய தாய் மற்றும் சேயை ராணுவத்தினர் திரு. நாசர் அஹமது என்பவரின் அழைப்பை ஏற்று இரவு நேரத்திலும் விரைந்து சென்று மீட்டு பத்திரமாக வீடு சேர்த்தனர்.