முதல் முறையாக ஸ்வார்ம் ட்ரோன் தொழில்நுட்பத்தை வெளிகாட்டிய இந்தியா !!

  • Tamil Defense
  • January 16, 2021
  • Comments Off on முதல் முறையாக ஸ்வார்ம் ட்ரோன் தொழில்நுட்பத்தை வெளிகாட்டிய இந்தியா !!

நேற்று தலைநகர் தில்லியில் நடைபெற்ற இந்திய தரைப்படை தின விழாவில் மிக முக்கியமான தொழில்நுட்பம் ஒன்று வெளி காட்டப்பட்டது.

ஸ்வார்ம் ட்ரோன் அதாவது ட்ரோன் கூட்டம் தொழில்நுட்பம் போர்முறையை மாற்றி வரும் தொழில்நுட்பமாகும்.

இதில் ஒரு தாய் ட்ரோன் பல சிறிய “குழந்தை” ட்ரோன்களை களமிறக்கி விட்டு இயக்கும். கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ட்ரோன்களை வைத்து நிகழ்த்தி காட்டப்ட்ட இந்த தொழில்நுட்பம் நேற்று சுமார் 75 ட்ரோன்களை கொண்டு நிகழ்த்தி காட்டப்பட்டது.

வருங்காலத்தில் ஒரே நேரத்தில் சுமார் 1000 ட்ரோன்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் திட்டத்தை ராணுவம் வைத்துள்ளது, தற்போது இந்திய தரைப்படை தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இதனை மேம்படுத்தி வருகிறது.

75 ட்ரோன்கள் மூலமாக சுமார் 700கிலோ பொருட்களை போர்களத்திற்கு கொண்டு செல்லவும், எதிரி வீரர்கள் டாங்கிகள் பிரங்கிகள் மீது தாக்குதல் நடத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப்படையும் இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது அதாவது ஒரு ஜாகுவார் போர் விமானத்தில் இருந்து சுமார் 24 ட்ரோன்களை ரிலீஸ் செய்து இயக்கும் திறனை உருவாக்கி வருகிறது.

இந்த தொழில்நுட்பம் வருங்கால போர்முறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் பல நாடுகள் ஏற்கெனவே இதற்கான பணிகளை தொடங்கி விட்டன, நமது அண்டை நாடான சீனா இதனை படையில் இணைத்து விட்டது குறிப்பிடத்தக்கது.