அஸ்திரா ஏவுகணை இந்திய விமானப்படையில் இணைப்பு !!

  • Tamil Defense
  • January 16, 2021
  • Comments Off on அஸ்திரா ஏவுகணை இந்திய விமானப்படையில் இணைப்பு !!

அஸ்திரா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஆகும், இது விமானப்படையில் இணைக்கப்பட்டதாக இந்திய விமானப்படை அறிவித்து உள்ளது.

அஸ்திரா ஏவுகணை பல்வேறு உயரங்களில் எவ்வித தட்பவெப்ப நிலையிலும் குறைந்தபட்சம் 20கிமீ தொலைவு மற்றும் அதிகபட்சமாக 80-110கிமீ தொலைவுகளிலும் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது.

இந்த ஏவுகணைகள் நமது சுகோய்30, மிராஜ்2000, மிக்29 மற்றும் தேஜாஸ் ஆகியவற்றில் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணை பாக் மற்றும் சீன விமானப்படைகளுக்கு பெரும் சவாலாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.