
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா உறுப்பு நாடாக தனது இரண்டு ஆண்டுகள் பதவிக்காலத்தை சமீபத்தில் துவங்கியது.
அதனையடுத்து நடைபெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் பேசிய இந்திய பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி அவர்கள்,
சிரியாவின் வேதியியல் ஆயுதங்கள் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத குழுக்களிடம் சிக்கும் ஆபத்து உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் சிரியாவில் உள்ள வேதியியல் ஆயுதங்களை அழிக்க இந்தியா 1 மில்லியன் டாலர்களை நிதி உதவியாக அளித்துள்ளது எனவும்,
சிரியாவில் அமைதி திரும்புவதில் இந்தியா அதிகம் நாட்டம் கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.