ஏப்ரலில் 114 போர் விமானங்களை படையில் சேர்க்கும் திட்டத்தை துவங்க இந்தியா முயற்சி !!

  • Tamil Defense
  • January 18, 2021
  • Comments Off on ஏப்ரலில் 114 போர் விமானங்களை படையில் சேர்க்கும் திட்டத்தை துவங்க இந்தியா முயற்சி !!

இந்த ஆண்டு ஏப்ரல் மே மாத வாக்கில் இந்திய விமானப்படையின் நீண்ட நாள் திட்டமான 114 போர் விமானங்களை தயாரிக்கும் திட்டத்தை துவங்க முயற்சி நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலேயே தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் சுமார் 114 போர் விமானங்களை தயாரிக்கும் மெகா திட்டமான இது பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.

இந்த திட்டம் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு மிக்கது என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன .