
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 21 மிக்29 மற்றும் 12 சுகோய்30 எம்.கே.ஐ போர் விமானங்களை வாங்க முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
12 சுகோய் 30 போர் விமானங்கள் அவற்றின் ஆயுத அமைப்புகள், உதிரி பாகங்கள் மற்றும் பிற சப்ளைகளை சேர்த்து ஒட்டுமொத்தமாக சுமார் 10,730 கோடி ருபாய் ஆகும்.
அதை போல 21 மிக்29 அவற்றிற்கான இதர சேவைகளுடன் சேர்த்து சுமார் 7,500 கோடி ருபாய் ஆகும் என கூறப்படுகிறது.
மேலும் ஏற்கனவே பயன்படுத்தி வரப்படும் மிக்29 மற்றும் சுகோய்30 விமானங்களை மேம்படுத்தும் திட்டமும் உள்ளது.