
2020இல் இந்தியா, டிஆர்டிஓ மேம்படுத்திய பல்வேறு ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து பார்த்தது. மேலும் DRDO பல்வேறு ஏவுகனைகளை தற்போது மேம்படுத்தி வருகிறது. அதைபோல் 2021லும் இந்தியா DRDO மேம்படுத்தி வரும் புதிய ஏவுகணைகளை சோதனை செய்ய உள்ளது.
1)பிரம்மோஸ் ER பிளாக் 4
இந்தியா ஏற்கனவே 290 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை 400கிலோமீட்டர் வரை தாக்கும் அளவுக்கு தூரத்தை அதிகரித்துள்ளது. அதை மேலும் 800 கிலோ மீட்டராக அதிகரிக்க தற்போது பிரம்மோஸ் ER பிளாக் 4 என்ற ஏவுகணை மேம்படுத்தி வருகிறது. மேலும் இந்த ஏவுகணை மாக் 4.5 வேகத்தில் செல்லக் கூடியதாகவும் அமையும். இதற்காக DRDO பெருமுயற்சி எடுத்து ப்ரமோஸ் ஏவுகணையின் 400 கிலோ மீட்டர் தூரத்தை 800 கிலோ மீட்டராக மாற்றம் செய்ய செயல்பட்டு வருகிறது. இந்த நீட்டிக்கப்பட்ட தூரம் செல்லும் பிரமோஸ் ஏவுகணை விரைவில் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
2) அஸ்திரா- IR
அடுத்ததாக இன்ப்ரா ரெட் இமேஜ்னரி ஹோமிங் அமைப்பு பொருத்தப்பட்ட அஸ்திரா ஏவுகணை சோதனை செய்யப்பட உள்ளது. இந்த ஏவுகணை நடுத்தர மற்றும் குறைந்த இலக்கை தாக்க பயன்படுத்தப்படும்.
இதற்காக DRDO பேசிவ் இன்பிராரெட் சென்சார் ஒன்றை மேம்படுத்தியுள்ளது. எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் இந்த ஏவுகணை 2021 சோதனை செய்யப்படும்.
3) அஸ்திரா மார்க் 2
இந்தியா ஏற்கனவே 100 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய அஸ்திரா ஏவுகணையை மேம்படுத்தியுள்ளது. மேலும் இந்தத அஸ்திரா ஏவுகனை சுகாய் விமானத்தில் இருந்து பல்வேறு முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து முதல் தொகுதி அஸ்திரா ஏவுகணை வாங்க இந்தியா அனுமதி வழங்கி உள்ளது. அதை தொடர்ந்து தற்போது 160 கிலோமீட்டர் வரை செல்ல உள்ள அஸ்திரா மார்க் 2 ஏவுகணையை 2021ல் சோதனை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
4)ஆகாஸ் NG
அடுத்ததாக ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணையின் அடுத்த தலைமுறை ரகத்தை டிஆர்டிஓ தற்போது மேம்படுத்தி வருகிறது. இந்த ஏவுகணையையும் 2021 சோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆகாஷ் NG ஏவுகணை அமைப்பு ஆகாஷ் ஏவுகணை அமைப்பைபோல் இல்லாமல் முற்றிலும் புதிய வகையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மற்றும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பதை விட அதி நவீனமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
50 கிலோ மீட்டர் தொலைவில் வரும் வான் இலக்குகளை இந்த ஆகாஷ் NG அமைப்பு தாக்கி அழிக்கும். தற்போது இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் உபயோகித்து வரும் எம்ஆர்சேம் ஏவுகனை அமைப்புக்கு துணையாக இந்த ஆகாஷ் NG ஏவுகணை அமைப்பு செயல்படும்.
5) ஸ்டார்
ஸ்டார் அல்லது சூப்பர்சோனிக் இலக்கு அமைப்பு என்பதை டிஆர்டிஓ தற்போது மேம்படுத்தி வருகிறது. இதன் உபயோகம் என்னவென்றால் மற்ற ஏவுகணை அமைப்புகளை சோதனை செய்வதற்காக ஒரு சூப்பர் சோனிக் வேகத்தில் செல்லக்கூடிய இலக்கு அமைப்பாக இது செயல்படும். இந்த ஸ்டார் அமைப்பில் திரவ ராம்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இதன் மூலம் இந்த அமைப்பு சூப்பர் சோனிக் வேகத்தில் செல்லும்.
இந்த ஸ்டார் அமைப்பை ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்த முடியும். கடலில் உள்ள இலக்கை சூப்பர்சோனிக் வேகத்தில் தாக்கி அழிக்க இந்த ஸ்டார் அமைப்பு உபயோகப்படுத்தப்படும். இது பிரமோஸ் ஏவுகணைக்கு ஒரு மாற்றாக விலை குறைவான அமைப்பாகக் கருதப்படுகிறது இந்த அமைப்பும் வரும் 2021ல் சோதனை செய்யப்படவுள்ளது.