இந்திய சீன மோதல் எதிரொலி: வரும் கோடை காலத்தை சமாளிக்க ஏவுகனைகளை சேமித்து வைக்கும் பாதுகாப்பு படைகள்

  • Tamil Defense
  • January 1, 2021
  • Comments Off on இந்திய சீன மோதல் எதிரொலி: வரும் கோடை காலத்தை சமாளிக்க ஏவுகனைகளை சேமித்து வைக்கும் பாதுகாப்பு படைகள்

கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை பிரச்சனை தொடர்ச்சியாக எட்டாவது மாதமாக தொடர்வதாலும், மேலும் வரும் கோடையில் ஏற்படக்கூடிய சவால்களை சமாளிக்கவும் இந்தியா தனது ஏவுகணைகளை சேமித்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் இஸ்ரேலின் ரபேல் அட்வான்ஸ் டிபன்ஸ் சிஸ்டம் நிறுவனத்திடம் சுமார் 200 மில்லியன் டாலர்கள் அளவிலான ஒப்பந்தத்தை இந்தியா வழங்கியுள்ளது.இந்த ஒப்பந்தம் படி இஸ்ரேல் இந்தியாவிற்கு ஸ்பைஸ் குண்டுகளையும், 300 முதல் 320 டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளையும்,BNET புரோட்பேன்ட் ஐபி சாப்டேர் ரேடியோக்களும் வழங்கும்.

டிசம்பர் 24 தேதியில் வெளியிட்ட அறிக்கையில் இந்த உபகரணங்கள் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட உள்ளது. அவசரகால இறக்குமதியாக ரூ .300 கோடி வரை மதிப்புள்ள ஆயுத அமைப்புகளை வாங்குவதற்காக இந்த ஜூலை மாதம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் ஆயுதப்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீன பிரச்சனையை கருத்தில் கொண்டு ஸ்பைஸ் 2000 வான்-தரை குண்டுகள் புதிதாக அவசரகால கொள்முதலாக வாங்கப்படுகிறது என்று மூத்த ஐ.ஏ.எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குண்டுகள் ஏற்கனவே மிராஜ் 2000 மற்றும் IAF இன் சுகோய் -30 போர் விமானங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

ஸ்பைஸ் 2000 குண்டுகள் பாலகோட் தாக்குதலின் போது தனது திறனை நிரூபித்தது.நீண்ட தூர இலக்கை இந்த குண்டால் துல்லியமாக தாக்க முடியும்.ஒரு போரில் இந்த திறன் மிக முக்கியமானதாகும்.

ஆர்டர் செய்யப்பட்ட குண்டுகள் 250 சுகாய் -30 கள் மற்றும் 50 மிராஜ் 2000 களுக்கு போதுமானதாக இருக்காது என்றும் IAF மூத்த அதிகாரி கூறியுள்ளார்.500 கிலோ எடையுள்ள ஸ்பைஸ் 1000 குண்டுகளை ஜாகுவார் மற்றும் தேஜாஸ் விமானங்களுடன் ஒருங்கிணைக்க முடியும் என்று அந்த அதிகாரி கூறினார்.

இது போல ரபேல் விமானங்களில் பயன்படுத்த ஹாம்மர் குண்டுகளை விமானப்படை பெற்றுள்ளது.