
இந்திய தரைப்படை தினம் வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது, இதையொட்டி தலைநகர் தில்லியில் தரைப்படை தளபதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தேசிய பாதுகாப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே,
“சீனா பாகிஸ்தான் இடையே ராணுவ ரீதியான மற்றும் பிற ஒத்துழைப்புகள் பெரிய அளவில் அதிகரித்து உள்ளதாகவும்,
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கொள்கையின் ஒரு பகுதியாக பயன்படுத்தி வருவதாகவும் அதை இந்தியா சமாளிக்கும் எனவும் கூறினார்.
மேலும் பேசுகையில் சீனா பாகிஸ்தான் கூட்டணி இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் எனவும்
இந்தியா இருமுனை போருக்கு தயாராக இருப்பது காலத்தின் கட்டாயம் எனவும் அவர் கூறினார்.