இந்திய வானூர்திகளை ஏற்றுமதி செய்யும் காலம் வந்துவிட்டது: தேஜாஸின் தந்தை !!

  • Tamil Defense
  • January 16, 2021
  • Comments Off on இந்திய வானூர்திகளை ஏற்றுமதி செய்யும் காலம் வந்துவிட்டது: தேஜாஸின் தந்தை !!

தேஜாஸ் இலகுரக போர் விமான திட்டத்தின் தந்தை என அறியபடுபவர் முனைவர் கோட்டா ஹரிநாரயணா ஆவார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தேஜாஸ் திட்டத்தில் பெற்று கொண்ட அனுபவங்கள் பற்றி பேசினார்.

அவர் கூறுகையில் நான் முனைவர் பட்டம் பெற படித்து கொண்டு இருக்கும் போது தான் தேஜாஸ் போர் விமானத்தை உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

இன்று தேஜாஸ் இந்திய விமானப்படையிலும் இணைந்து தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது.

தேஜாஸ் போர் விமானம் அதன் பிறப்பை ஒப்பிடுகையில் இன்று பன்மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது, மிகவும் நவீனத்துவம் கொண்டதாக உருமாற்றம் பெற்றுள்ளது.

தேஜாஸின் மார்க்1 வடிவம் இலகு ரகம் ஆகும், 3 டன்களுக்கும் சற்றே அதிகமான ஆயுதங்களை சுமக்கும் இது மிக்21 விமானங்களுக்கு மாற்று.

அதுவே தேஜாஸ் மார்க்2 வடிவத்தை பற்றி நாம் பேசினால் அது ஒர் நடுத்தர வகை விமானம் சுமார் 6.5 டன்கள் சுமைதிறன் கொண்ட இது நம் விமானப்படையில் உள்ள மிக்29, Mirage 2000 ஆகிய விமானங்களுக்கு மாற்றாக அமையும்.

இந்தியா இறக்குமதியை நிறுத்தி விட்டு இந்திய தயாரிப்பு விமானங்களை ஏற்றுமதி செய்யும் காலம் கனிந்து விட்டதாக அவர் கூறினார்.