சீனாவுக்கு எதிராக நிரந்தரமாக 2 கோர் படைகளை நிலைநிறுத்த தரைப்படை முடிவு !!

  • Tamil Defense
  • January 6, 2021
  • Comments Off on சீனாவுக்கு எதிராக நிரந்தரமாக 2 கோர் படைகளை நிலைநிறுத்த தரைப்படை முடிவு !!

சீனாவுடன் எல்லையில் பிரச்சினை நடைபெற்று வரும் நேரத்தில் சிறிய மறுசீரமைப்புக்கு பின்னர் இரண்டு கோர் படைகளை சீனாவுக்கு எதிராக நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் 1 கோர் படை மற்றும் மேற்கு வங்க மாநிலம் பானாகரை தலைமை இடமாக கொண்டு இயங்கும் 17ஆவது கோர் ஆகிய படை பிரிவுகள் சீனாவுக்கு எதிராக நிலைநிறுத்தப்படும்.

இரண்டுமே தாக்குதல் கோர்கள் என்பதும் நேரடியாக போரில் முன்செல்லும் படைப்பிரிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.