
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் முனைவர் சதீஷ் ரெட்டி சமீபத்தில் இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா கணிசமான அளவில் இறக்குமதியை குறைத்து மிகப்பெரிய அளவில் ஆயுத ஏற்றுமதியை செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் ஒரு நாடு பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைய வேண்டுமானால் தளவாடங்களின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் தயாரிப்பு ஆகியவை உள்நாட்டிலேயே நடக்க வேண்டும் என்றார்.
அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 35,000 கோடி ருபாய்க்கு ஆயத ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.