அணுசக்தி சார்ந்த இடங்களின் தகவல்களை இந்த ஆண்டும் பரிமாறி கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் !!

  • Tamil Defense
  • January 3, 2021
  • Comments Off on அணுசக்தி சார்ந்த இடங்களின் தகவல்களை இந்த ஆண்டும் பரிமாறி கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் !!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வழக்கம் போல இந்த ஆண்டும் நேற்றைய தினம் இரு நாடுகளில் உள்ள அணுசக்தி சார்ந்த இடங்களின் தகவல்களை பரிமாறி கொண்டன.

கடந்த 1988 ஆம் ஆண்டு கையெழுத்து ஆன ஒப்பந்தத்தின்படி இந்த தகவல்கள் பரிமாறப்படுகிறது, கடந்த 1992 முதல் இது ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகங்களின் வாயிலாக முறையே இரவு 11:30 மற்றும் 11:00 மணிக்கு இந்த பரிமாற்றம் நடைபெற்றது.