சீன நீர்மூழ்கிகளை கண்காணிக்க ஒன்றினையும் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா !!

  • Tamil Defense
  • January 3, 2021
  • Comments Off on சீன நீர்மூழ்கிகளை கண்காணிக்க ஒன்றினையும் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா !!

பல ஆண்டுகளாக சீன கடற்படை நீர்மூழ்கி கலன்கள் தென்சீன கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் தொந்தரவாக இருக்கிறது.

இந்த நிலையில் சீன நீர்மூழ்கிகளை கண்காணிக்க இந்தியா அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ள உள்ளன.

அந்த வகையில் SOSUS – Sound Surveillance Sensors Chain எனும் சோனார் வகையறா அமைப்பினை தென்சீன கடல் முதல் இந்திய பெருங்கடல் வரை கட்டமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.