ஆஃப்கானிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை இந்தியா அதிகரிக்கும் வாய்ப்பு !!

சமீபத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் திரு. சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் மற்றும் ஆஃப்கன் வெளியுறவு அமைச்சர் திரு. மொஹமட் ஹனீஃப் அட்மார் இடையே தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது அமெரிக்கா தனது படைகளை ஆஃப்கனில் இருந்து முழுவதுமாக வெளியேற்ற உள்ள நிலையில்,

தலிபான்கள் அமெரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வரும் சமாதான பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகிறது.

அதே நேரத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் சக்தியான இந்தியா ஆஃப்கன் நலனில் அக்கறை மிகுந்த நாடு ஆகவே ஆஃப்கன் அமைதிக்கு உதவ வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

ஏற்கனவே தலிபான்கள் வழியாக ஆஃப்கனில் பாகிஸ்தான் ஊடுருவ முயன்று வரும் நிலையில்,

இந்தியா ஆஃப்கன் படைகளுக்கு தனது ராணுவ உதவிகளை அதிகரிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம் என கூறப்படுகிறது.