அக்னி 5 ஏவுகணையை விரைவில் படையில் இணைக்க உள்ள இந்தியா !!

  • Tamil Defense
  • January 5, 2021
  • Comments Off on அக்னி 5 ஏவுகணையை விரைவில் படையில் இணைக்க உள்ள இந்தியா !!

5000கிமீ தாக்குதல் வரம்பு கொண்ட அணு ஆயுத தாக்குதல் ஏவுகணையான அக்னி5ஐ விரைவில் படையில் இணைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே முழு அளவிலான தயாரிப்பு பணிகளை எட்டியுள்ள இந்த ஏவுகணை அடுத்த சில மாதங்களில் படையில் இணைக்கப்பட உள்ளது.

அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணை ஒட்டுமொத்த ஆசிய கண்டம் மற்றும் ஐரோப்பாவில் பாதியை தாக்கும் ஆற்றல் கொண்டது என்பது கூடுதல் தகவல்.

மேலும் எல்லையில் சீனாவின் அடாவடித்தனம் இந்த ஏவுகணையை படையில் விரைந்த இணைக்க முயற்சிப்பதன் முக்கிய காரணி எனவும் கூறப்படுகிறது.