இந்தியா ஃபிரான்ஸ் இடையிலான நட்பு ஆழமானது – ஃபிரான்ஸ் தூதர் !!

நேற்று இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் எம்மானுவேல் லென்னாய்ன் ஜோத்பூர் தளத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் நம் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பின் அடையாளம் என்றார்.

மேலும் பேசுகையில் இந்தியா ஃபிரான்ஸ் இடையிலான நட்புறவு ஆழமானது மேலும் அனைத்து காலங்களிலும் நிலையானது எனவும்,

அதனால் தான் இந்திய பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்திய போது கூட பல்வேறு தடைகளையும் மீறி ஃபிரான்ஸ் இந்தியாவை ஆதரித்தது என்றார்.

இந்தியாவை தொடர்ந்து சர்வதேச அரங்கில் ஆதரித்து வரும் நெருங்கிய நட்பு நாடு ஃபிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.