விரைவுபடுத்தப்படும் ஈரான் சாபஹார் துறைமுக பணிகள் !!
1 min read

விரைவுபடுத்தப்படும் ஈரான் சாபஹார் துறைமுக பணிகள் !!

ஈரானில் உள்ள சாபஹார் நகரில் இந்தியா ஒரு துறைமுகத்தை கட்டி வருகிறது, மந்தமாக நடைபெற்று வந்த இப்பணிகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

இந்தியா துறைமுகத்தில் சரக்குகளை கையாள பயன்படும் கிரென்களை சாபஹாருக்கு அனுப்பி உள்ளது.இத்தாலியில் இருந்த வாங்கப்பட்ட இந்த கிரென்கள் சாபஹார் சென்றடைந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்த கருவிகளின் மொத்த மதிப்பு 8.5மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.இந்த கிரென்கள் ஒரு நாளைக்கு 15,000 டன்கள் அளவிலான சரக்குகளை கையாளும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.