
கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது அதில் ஆசியாவில் இருந்து போட்டி இன்றி இந்தியா வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்று இந்தியா தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தை தொடங்கியது,
இந்தியாவுடன் நார்வே, கென்யா, அயர்லாந்து மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் தங்களது பதவிக்காலத்தை துவங்குகின்றன.
இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பெற தீவிர முயற்சி மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.