
இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகள் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மாதவன் அவர்கள் உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்கள் குறித்த சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.அவற்றை சுருக்கமாக கீழே தொகுத்துள்ளோம்.
அனைத்து 8 LCA தேஜஸ் Mk-1 பயிற்சி விமானங்களும் FOC எனப்படும் Final Operation clearance உரிய கட்டமைப்பு பெற்றிருக்கும்.
2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்திய விமானப்படைக்கு 7 FOC தேஜஸ் விமானங்களை ஹால் நிறுவனம் டெலிவரி செய்யும்.
மீதமுள்ள FOC ஒற்றை இருக்கை தேஜஸ் விமானங்கள் 2021-22ம் ஆண்டில் டெலிவரி செய்யப்படும் என கூறியுள்ளார்.
ஒரு தேஜஸ் Mk-1A விமானத்தின் விலை 309 கோடிகளாக இருக்கும்.Mk-1a விமானங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் டெலிவரி செய்யாவிட்டால் 10% அபராதம் விதிக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.
2028ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படைக்காக இரட்டை என்ஜின் கொண்ட TEDBF விமானம் தயாராகும் என மாதவன் அவர்கள் கூறியுள்ளார்.
தேஜசின் LIFT ரக பயிற்சி விமானத்தை அமெரிக்க கடற்படைக்கு வழங்க தயாராக இருப்பதாக ஹால் நிறுவனம் கூறியுள்ளது.
தேஜஸ் Mk-2 எனப்படும் நடுத்தர எடை விமானத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.முதல் விமானம் ஆக 2022ம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025-26 ஆண்டு வாக்கில் முதல் விமானம் விமானப்படைக்கு டெலிவரி செய்யப்படும்.
அடுத்ததாக LCH வானூர்தி விமானப்படை மற்றும் இராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்தமையால் வரும் மார்ச்சில் தொடர் தயாரிப்பிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும்.இந்த வருடத்திற்குள் மூன்று வானூர்திகள் டெலிவரி செய்யப்படும்.முழு அளவிலான தயாரிப்பு அடுத்த வருடம் தொடங்கும்.