இந்தியாவின் மேற்கு அண்டை நாடு மற்றும் குறிப்பாக கிழக்கு அண்டை நாடு ராணுவ பலத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி நவீனமயமாக்கலில் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவும் அதற்கு சமமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில் 2021ஆம் வருடம் இந்தியா கீழ்க்கண்ட 8 ஒப்பந்தங்களை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
1) LCH – இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்.
HAL தயாரிப்பான இந்த தளவாடம் 15ஐ வாங்க அரசு அனுமதி அளித்த போதிலும் இதுவரை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
2) ATAGS பிரங்கி
முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த பிரங்கி இதன் வகையில் உலகிலேயே அதிக தொலைவில் உள்ள இலக்கை தாக்க கூடிய சிறப்பு கொண்டதாகும்.
உடனடியாக சுமார் 150 பிரங்கிகள் வாங்க தரைப்படை வாங்க அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் இதுவயை ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில்லை.
3) தேஜாஸ் மார்க்-1ஏ
சுமார் 83தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்க விருப்பம் தெரிவித்து உள்ள நிலையில் இதுவரை ஒப்பந்தம் உறுதி செய்யப்பட வில்லை.
4) ப்ராஜெக்ட் 75I நீர்மூழ்கி கப்பல்கள்
AIP திறன் கொண்ட 6 அதிநவீன டீசல் எலக்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படை வாங்குவதன் மூலமாக தனது நீர்மூழ்கி பலத்தை இந்திய பெருங்கடல் பகுதியில் உறுதிப்படுத்தி கொள்ள விரும்புகிறது.
எனினும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகாமல் காலதாமதம் ஆகி கொண்டே போகிறது.
5) கடற்படை போர் விமானங்கள்
இந்திய கடற்படை தனது மிக்29 போர் விமானங்களுக்கு மாற்றாக 57 புதிய போய் விமானங்களை வாங்க விரும்புகிறது.
பட்ஜெட் காரணங்களால் 57 36ஆகிய நிலையில் தற்போது எவ்வித முன்னேற்றமும் காணாமல் தேக்க நிலையில் உள்ளது.
6) இந்திய விமானப்படைக்கு 110 போர் விமானங்கள்
இந்திய விமானப்படை தனது பல்திறன் போர் விமான பலத்தை அதிகரிக்கும் நிலையில் 110 புதிய பல்திறன் போர் விமானங்கள் வாங்க விரும்புகிறது.
இதுவரை 6 நிறுவனங்கள் போட்டியில் பங்கேற்றுள்ள நிலையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில்லை.
இந்த வருடம் ஒப்பந்தம் கையெழுத்து ஆனால் தான் 2024ஆம் வருடம் டெலிவரி துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
7) ஏகே 203 தாக்குதல் துப்பாக்கி
சுமார் 7 லட்சம் ஏகே203 துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகி ஆலைக்கான இடமும் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஆலை கட்டுமான பணிகள் இன்னும் துவங்காமல் தேக்க நிலையில் உள்ளது.
8) ட்ரோன்கள்
தரைப்படை விமானப்படை கடற்படை என தலா 10 ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் வீதம் மொத்தமாக 30ஐ வாங்க இந்தியா விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.