சீனா ஆக்ரோசமாக நடந்து கொண்டால் நாங்களும் அப்படியே-விமானப்படை தளபதி

  • Tamil Defense
  • January 24, 2021
  • Comments Off on சீனா ஆக்ரோசமாக நடந்து கொண்டால் நாங்களும் அப்படியே-விமானப்படை தளபதி

சீனாவின் தொடர்ந்த தலைவலி தரும் போக்கு மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் தொடர் கட்டுமானங்கள் ஏற்படுத்தி வருவது குறித்து பதிலளித்துள்ள விமானப்படை தளபதி சீனா ஆக்ரோசமாக நடந்து கொண்டால் நாமும் அதே போல வன்முறையாக நடந்து கொள்வோம் என கூறியுள்ளார்.

ஜோத்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தளபதி விமானப்படை போருக்கு முழு அளவில் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

டெசர்ட் நைட் பயிற்சி உட்பட கிழக்கு எல்லை புறத்தில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சிகள் எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல எனவும் இது இருநாடுகளுக்கு ( பிரான்ஸ் மற்றும் இந்தியா) இடையே உள்ள உறவை மேம்படுத்தவே நடைபெறுகிறது என தளபதி பதாரியா கூறியுள்ளார்.

அருணாச்சலில் சீனாவின் கட்டுமானங்கள் குறித்து பேசிய அவர் வெளியுறவு அமைச்சகம் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மற்றம் தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவும் எல்லைப் பகுதிகளில் சாலைகள்,பாலங்கள் என கட்டுமானங்களை அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.