
இந்திய தரைப்படை தனது தேவைகளை சந்திக்கும் வகையில் அடிப்படை கண்காணிப்பு ட்ரோன்களுக்கான இறக்குமதிக்கு நோ சொல்லி விட்டு ஒர் இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.
பெங்களூரை தளமாக கொண்டு இயங்கும் “Idea forge” எனும் நிறுவனம் இதற்கான ஆர்டரை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 130கோடி ஆகும். இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் உற்பத்தி நிறுவனமாக “ஐடியாஃபோர்ஜ்” உருமாறி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலிய எல்பிட் நிறுவனம், இந்தியாவின் டாடா குழுமம், டைனமிக் டெக்னாலஜிஸ், அஸ்டீரியா ஏரோஸ்பேஸ் மற்றும் விடோல் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்களை ஐடியாஃபோர்ஜ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐடியாஃபோர்ஜ் நிறுவனத்தின் “Switch UAV” ட்ரோன் தான் தேர்வு செய்யப்பட்டு உள்ளது, இது 6.5 கிலோ எடை கொண்டது மேலும் 2 மணி நேரம் தொடர்ந்து இயங்கவும், 4கிமீ உயரம் வரையும் 15கிமீ தொலைவு செல்லும் வரையும் வடிவமைக்க பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.