2021ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட் இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தின் தீவிரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஏனெனில் அடுத்த 5 ஆண்டுகளில் தன்னிறைவு எனும் இலக்கை நோக்கி பாதுகாப்பு படைகள் பயணிக்க உள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது.
ஆகவே பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 85.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 6லட்சம் கோடி ருபாய்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் நமது பாதுகாப்பு பட்ஜெட் 3.37 லட்சம் கோடிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.