தேஜாஸ் போர் விமானத்தில் உள்ள வெளிநாட்டு தொழில்நுட்பங்களை குறைக்க முடிவு !!

  • Tamil Defense
  • January 19, 2021
  • Comments Off on தேஜாஸ் போர் விமானத்தில் உள்ள வெளிநாட்டு தொழில்நுட்பங்களை குறைக்க முடிவு !!

இலகுரக தேஜாஸ் போர் விமானம் இந்தியாவின் மிக நீண்ட நாள் கனவு என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது 83 தேஜாஸ் போர் விமானங்களுக்கு இந்திய விமானப்படை ஆர்டர் கொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேஜாஸ் போர் விமானத்தில் 80% இந்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதாவது தேஜாஸில உள்ள 344 அமைப்புகளில் 210 அமைப்புகள் இந்திய தயாரிப்பு ஆகும், 134 அமைப்புகள் வெளிநாட்டு தயாரிப்பு ஆகும்.

தற்போது வெளிநாட்டு அமைப்புகளை குறைத்து சுமார் 80% அளவுக்கு இந்திய தயாரிப்புகளால் நிரப்ப ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் திட்டம் வகுத்து உள்ளது.