மார்ச்சிற்குள் 3 தாக்கும் வானூர்திகள் டெலிவரி செய்ய திட்டம்

  • Tamil Defense
  • January 25, 2021
  • Comments Off on மார்ச்சிற்குள் 3 தாக்கும் வானூர்திகள் டெலிவரி செய்ய திட்டம்

மார்ச் மாத இறுதிக்குள் HAL நிறுவனம் மூன்று இலகு ரக தாக்கும் வானூர்தியை விமானப்படைக்கு டெலிவரி செய்ய உள்ளது.

ஹால் நிறுவனம் தற்போது இலகு ரக வானூர்தியை லிமிடெட் சீரியல் தயாரிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.தற்போது 15 வானூர்திகளை மட்டும் ஹால் நிறுவனம் தயாரிக்கும்.இதில் முதல் மூன்று வானூர்திகள் மார்ச் 31க்குள் டெலிவரி செய்யப்பட உள்ளது.

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்துள்ள வானூர்தி தான் இந்த இலகு ரக தாக்கும் வானூர்தி ஆகும். Light combat helicopter என கூறுவர்.

உலகிலேயே மிக இலகு ரக தாக்கும் வானூர்தி இது தான்.மற்றும் உலகிலேயே அதிக உயரம் பறக்க கூடிய தாக்கும் வானூர்தி இது தான்.அதாவது 21000 அடி உயரம் வரை பறக்க கூடியது.

ராக்கெட்,ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை சுமந்து செல்ல கூடியது.

Elbit CoMPASS optoelectronic suite, ஏவுகணை வருவதை எச்சரிக்கும் அமைப்பு (MWS) ,
Missile approach warning system
Saab radar மற்றும் லேசர் எச்சரிக்கை அமைப்பு.தவிர எதிரி ஏவுகணைகளை குழப்ப சாஃப் மற்றும் ஃப்ளேர் டிஸ்பென்சர்கள் உள்ளன.