
கடந்த ஆண்டு ஜூன்15 அன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன படையினரை வீழ்த்தி வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்பட்டு உள்ளன.
கடந்த வருடம் பல்வேறு சண்டைகளில் வீர மரணம் அடைந்த 70 வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் நடவடிக்கையை அடுத்து நேற்று வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.