
கடந்த வருடம் ஜூன் 15ஆம் தேதி லடாக் மாநிலம் கல்வான் பள்ளதாக்கில் அத்துமீறி நுழைந்த சீன படையினருடன் நமது தரைப்படையின் 16ஆவது பிஹார் வீரர்கள் சண்டையிட்டனர். இந்த நடவடிக்கையை இந்திய தரைப்படை ஆபரேஷன் ஸ்நோ லெப்பர்ட் என அழைப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த மோதலில் அப்பிரிவின் கட்டளை அதிகாரி கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் அனைவரின் பெயரும் தில்லி தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்பட்டு உள்ளன, மேலும் லேயில் உள்ள 120ஆவது காவல்சாவடியிலும் தரைப்படை நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு கல்வான் வீரர்களுக்கு குடியரசு தினத்தன்று வீர தீர விருதுகளை வழங்கி கவுரவிக்க முடிவு செய்துள்ளது.