இந்தியாவுடன் பல்வேறு பாதுகாப்பு மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களை நிறைவேற்ற விரும்பும் ஃபிரான்ஸ் !!

  • Tamil Defense
  • January 10, 2021
  • Comments Off on இந்தியாவுடன் பல்வேறு பாதுகாப்பு மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களை நிறைவேற்ற விரும்பும் ஃபிரான்ஸ் !!

ஃபிரான்ஸ் ரஃபேல் விமானங்களில் 70% தயாரிப்பு அமைப்பை இந்தியாவில் நிர்மானிக்க விரும்புவதாகவும்

பேந்தர் ரக ஹெலிகாப்டர்களின் 100 % தயாரிப்பு அமைப்பையும் இந்தியாவில் நிர்மானிக்க விரும்புகிறது.

மேலும் 6 ஏர்பஸ்330 பலதிறன் போக்குவரத்து மற்றும் டேங்கர் விமானங்களை குத்தகை அடிப்படையில் இந்திய விமானப்படைக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளது.

இது தவிர மஹாராஷ்டிர மாநிலம் ஜெய்தாபூரில் சுமார் 9,900 மெகாவாட் அணுசக்தி நிலையத்தை அமைப்பது குறித்தும் இந்தியா வந்துள்ள ஃபிரெஞ்சு அரசின் ஆலோசகர் இம்மானுவேல் போன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.