போர் விமான என்ஜின்களை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ஃபிரான்ஸ் விருப்பம் !!

  • Tamil Defense
  • January 10, 2021
  • Comments Off on போர் விமான என்ஜின்களை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ஃபிரான்ஸ் விருப்பம் !!

இந்தியா வந்துள்ள ஃபிரான்ஸ் அரசின் ஆலோசகர் இம்மானுவேல் போன் நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார்.

அப்போது ரஃபேல் போர் விமானங்களில் பயன்படுத்தி வரப்படும் M88 Engine ரக என்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும்,

இலகுரக போர் விமானம் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஆம்கா ஆகியவற்றிற்கான இரட்டை என்ஜின்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் ஃபிரான்ஸ் விரும்புவதாக குறிப்பிட்டார்.