
ஃபிரெஞ்சு அரசு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்க உள்ளதாகவும்,
இந்தியாவுக்கு எதிரான சீனாவின் பொய் குற்றச்சாட்டுகளை ஏற்க போவதில்லை எனவும் அறிவித்து உள்ளது.
மேலும் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் சீனாவின் செயல்பாடு பற்றி கவலை தெரிவித்த ஃபிரான்ஸ் ஹோர்மூஸ் வளைகுடா பகுதியில் ஐரோப்பிய கடல்சார் விழிப்புணர்வு திட்டத்தில் இணையுமாறும்,
ஜிபூட்டி மற்றும் ஆஃப்ரிக்க முனையில் உள்ள ஃபிரெஞ்சு கடற்படை தளங்களை இந்தியா பயன்படுத்தி கொள்ளலாம் எனவும்,
இந்தோ பசிஃபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.